கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய தர்ஷா குப்தா! நடிகர் சதீஷ் சர்ச்சையில் சிக்க இது தான் காரணம்

கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய தர்ஷா குப்தா! நடிகர் சதீஷ் சர்ச்சையில் சிக்க இது தான் காரணம்

 

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சன்னி லியோனை மிஞ்சிய வகையில் படு கவர்ச்சியான உடையில் நடிகை தர்ஷா குப்தா கலந்து கொண்டார்.இதை விமர்சிக்கும் வகையில் நடிகர் சதீஷ் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

 

இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து நானாக எதையும் பேசவில்லை, அவர் சொன்னதை தான் பேசினேன் என நடிகர் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.

 

சமீபத்தில் ஓ மை கோஸ்ட் எனும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்தில் சன்னிலியோன், தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ், ஜிபி முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.அந்த வகையில் இந்த படத்தில் நடித்த இவர்கள் அனைவரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சதீஷ் அங்கு பேசுகையில் மும்பையிலிருந்து சன்னி லியோன் தமிழகத்திற்கு நமக்காக வந்திருக்கிறார்கள். அவர் எப்படி உடை அணிந்திருக்கிறார் பாருங்கள் (சன்னி லியோன் சேலை அணிந்திருந்தார்).

 

கோயமுத்தூரிலிருந்தும் ஒரு பொண்ணு வந்திருக்கு.. தர்ஷா குப்தா, அவரையும் பாருங்க. சன்னி எப்படி நமது கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் வந்திருக்கிறார் என சதீஷ் கிண்டலாக பேசியிருந்தார். அதாவது தர்ஷா குப்தா கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து வந்ததாகவும், அது கலாச்சாரம் இல்லை என்ற அர்த்தத்தில் சதீஷ் கூறினார். இது பெரும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.

 

இதுகுறித்து பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் ஒரு பெண்ணின் கவர்ச்சி உடை குறித்து ஒரு ஆண் விவரிக்கிறார். ஆண்கள் எப்போதுதான் திருந்துவார்களோ. இதெல்லாம் காமெடி கிடையாது என அந்த வீடியோவையும் சேர்த்து சின்மயி வெளியிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் நடிகர் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் தர்ஷா குப்தா என்னிடம், ‘பாருங்க நான் சன்னி லியோனை விட கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளேன். அவர் எப்படி வருகிறார் என்பதை பார்ப்போம்’ என்றார். ஆனால் சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்ததை கண்டு தர்ஷா குப்தா அப்செட் ஆகிவிட்டார்.

 

என்னிடம் மீண்டும் வந்த தர்ஷா ‘என்ன இவங்க சேலையில் வந்திருக்காங்க, நான் இப்படி கவர்ச்சி உடையில் வந்திருக்கேன். நான் அப்செட் ஆன விஷயத்தை கொஞ்சம் மேடையில் சொல்லுங்க’ என அவரே கேட்டுக் கொண்டார். எனவே அவர் சொன்னதை தான் நான் மேடையில் சொன்னேன். மற்றபடி நானாக எதையும் கூறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

 

ஆனால் இதற்கு பாடகர் ஸ்ரீனிவாஸ், இயக்குநர் நவீன், பாடகி சின்மயி, டாக்டர் ஷர்மிளா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.மேலும் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவர் உரிமை என்றார்கள். அவர்கள் சொல்வது போல் ஆண்களும் சரி பெண்களும் சரி எந்த ஆடையை அணிவது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 

அது போல் அவர்கள் இந்த விஷயத்திற்கு அவர்கள் எதிர்வினையாற்றியதும் நல்ல விஷயம் தான். இன்னும் சிலர், ஓ மை கோஸ்ட் படத்தின் பிரமோஷனுக்காக இயக்குநர் நவீன் உள்ளிட்டோர் ஆடை குறித்து நான் கூறிய விஷயத்தை பெரிதுப்படுத்தியதாக கூறுகிறார்கள். அதெல்லாம் இல்லை. அவர்கள் எல்லாம் உண்மையிலேயே எதிர்ப்பு தெரிவித்து தான் கருத்துகளை வெளியிட்டார்கள். நான் அந்த விழாவில் புகைப்பிடிக்க வேண்டாம், குடிக்க வேண்டாம் என்றெல்லாம் நல்ல விஷயங்களை சொல்லியிருக்கேன் அதையும் பாலோ செய்யுங்கள் என்றார்.

 

 

Exit mobile version