இனி இதை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை!!
சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி அவரின் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இதுபோன்ற ஸ்மோக் பிஸ்கட் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து. தயவு செய்து தமிழக அரசு இதை தடைசெய்ய வேண்டுமென எச்சரிக்கை பதிவு ஒன்றை செய்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் தற்போது இந்த வகையான உணவுப்பொருட்களை ரெஸ்டாரெண்ட்டில் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி குர்கான் பகுதியில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் ஸ்மோக் பிஸ்கட் வகை உணவுகளை சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திரவ நைட்ரஜன் கலந்த உணவுப்பொருட்களை யாரும் விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதை மீறி ட்ரை ஐஸ் உணவு பொருட்களை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்சம் அபராதம் என உத்தரவிட்டுள்ளனர்.
ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ஸ்மோக் பீடா போன்ற உணவுகள் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை உணவுகளை உண்ணும்போது திசுக்கள் உறைந்து இரைப்பை சிதைவு ஏற்படும். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்ல ட்ரை ஐஸ் உண்பதால் குழந்தைகளுக்கு கண் பார்வை மற்றும் பேச்சு பறிபோதல், உயிரிழப்புகள் ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.