முதலில் கர்ப்பம் தரித்து பின்னர் திருமணம் செய்து கொண்ட ஐந்து முன்னணி நடிகைகள்!!
பொதுவாக சினிமா துறையில் இருப்பவர்கள் தங்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்வது பின் இரண்டு மூன்று மாதங்களில் விவாகரத்து செய்வது என்று வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஆனால், தற்பொழுது நாம் படிக்க இருக்கும் செய்தி சற்று வித்தியாசமானது. அதாவது அனைவரும் திருமணம் செய்து பின்னர் கர்ப்பம் தரிப்பார்கள் ஆனால் இவர்கள் முதலில் கர்ப்பம் தரித்து பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்.மேலும்,சுவாரசியம் என்னவென்றால் இவர்களில் ஒரு சிலர் ஏற்கனவே திருமணமான சினிமா பிரபலங்களை திருமணம் செய்து கொண்டது தான்.திருமண வாழ்க்கையையாவது நன்றாக வாழ்ந்தார்களா ? என்றால் அதுவும் கிடையாது.இவர்கள் குழந்தை-திருமணம் பந்தம்-விவாகரத்து என்று நிலையில்லா வாழ்க்கையை தற்பொழுது வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், இன்றைய காலக்கட்டத்தில் அனைத்தும் நடக்கின்ற நிகழ்வுகள் தானே, இதில் பெரிதாக பேசுவதற்கு என்ன இருக்கின்றது என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் இது சினிமா பிரபலங்களின் நிஜ வாழ்க்கையில் இதற்கு முன் நடந்த,மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்களுக்கான செய்தி மட்டுமே.
இப்படி திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் ஆகி பின்னர் திருமணம் செய்து கொண்ட நடிகைகளின் விவரங்கள் இதோ.
முதல் இடத்தை பிடித்துள்ளார் நடிகை ‘சரிகா தாக்கூர்’, இவர் நடிகர் ‘கமல்’ அவர்களுடன் லிவ்-இன் ரிலேஷன்சிப்பில் இருந்ததால் கர்ப்பம் தரித்தார்.பிறகு குழந்தை பிறந்து குழந்தைக்கு 2 வயது ஆன போது தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.நாம் அனைவரும் சரிகா தான் கமலின் முதல் மனைவி என்று நினைத்து கொண்டிருக்கிறோம் ஆனால் அது உண்மை இல்லை.சரிகாவுக்கு முன் ‘வாணிகணபதி’ என்ற ஒரு கிளாசிக் டான்சரை கமல் 1978 ல் திருமணம் செய்து கொண்டார்,சுமார் 10 வருடங்கள் இவர்கள் இணைந்து வாழ்ந்தனர்.பிறகு சரிகாவை பார்த்து அவரது அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொண்டார்.இத்துடன் தனது காதல் லீலையை கமல் நிறுத்தாமல் நடிகை கௌதமி அவர்களுடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தார்.இதனால் சரிகா அவர்கள் கமல் அவர்களை விவாகரத்து செய்தார்.நடிகை சரிகாவின் வாழ்க்கை பக்கத்தை திருப்பி பார்த்தால் கண்ணீர் தான் வரும்,அம்மாவின் கொடுமை,கமலால் நாசமான வாழ்க்கை என்று பரிதாப நிலையில் வாழ்ந்து வருகிறார் சரிகா.
தற்பொழுது கமலுக்கும் கௌதமிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.இதையெல்லாம் பார்க்கும் பொழுது கமலின் காமலீலைக்கு ஒரு முற்று புள்ளியே இல்லையா? என்று தான் நினைக்க தோன்றுகிறது.
இரண்டாவது இடத்தில் இருப்பவர் தான் நம் மனதில் ‘மயிலு’ ஆக வாழ்ந்து வரும் நடிகை ‘ஸ்ரீதேவி’.நடிப்பின் நாயகி,லேடி சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் போற்றப்படும் இவர் முதலில் கர்ப்பம் தரித்து பின்னர் கல்யாணம் செய்து கொண்டார் என்றால் நம்ப முடிகிறதா ?
பாலிவுட் இயக்குனர் ‘போனி கபூர்’ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கர்ப்பம் தரித்து பின்னர் இருவரும் திருமணம் செய்து கொணடனர்.இவர்களின் காதல் கதையில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது காரணம், இவர்கள் முதலில் அண்ணன், தங்கை போல தான் பழகி வந்தனர்.பின்னர் நாளடைவில் ஏற்பட்ட நெருக்கத்தால் போனி கபூர் அவர்களால் ஸ்ரீதேவி கர்ப்பமானார்.மேலும், போனி கபூர் அவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில் ஸ்ரீதேவி கர்ப்பம் தரித்த தகவல் போனி கபூரின் முதல் மனைவி ‘மோனா கபூர்’ அவர்களுக்கு தெரியவர இருவருடனும் சண்டை போட்டுள்ளார் .பல பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக ஸ்ரீதேவியை போனி கபூர் அவர்கள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.மேலும்,ஸ்ரீதேவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு துரதிஷ்டவசமாக இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளார் நடிகை ‘ஆலியா பட்’. இவர் பாலிவுட் ஆக்டர் ‘ரன்வீர் கபூர்’ அவர்களுடன் காதலில் வயப்பட்டு இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர்.மேலும் அனைவரும் எதிர்பார்த்த படி ‘ஆலியா பட்’ கர்ப்பம் தரித்தார்.இந்நிலையில் இவ்விவகாரம் பூதாகாரம் ஆகுவதற்குள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
நான்காவது இடத்தை பிடித்துள்ளார் நடிகை ‘சமீரா ரெட்டி’ , வாரணம் ஆயிரம்,வெடி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.இவரும் மற்ற நடிகைகள் போல் திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் தரித்தவர் தான்.தொழிலதிபர் ‘அக்க்ஷய் வர்டே’ என்பவருடன் காதல் மலர்ந்து பின் கர்ப்பமானார்.பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
5 ஆவது இடத்தை பிடித்துள்ளார் நடிகை ‘ஏமி ஜாக்சன்’ , இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்.தமிழில் மதராசப்பட்டினம்,தெறி,தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையானார்.இப்படி இவரது சினிமாதுறை வாழ்க்கையில் பிஸி ஆக இருந்தார்.இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த பெரிய தொழிலதிபரான ‘ஜார்ஜ்’ என்பவருடன் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.இதில் விசேஷம் என்னவென்றால் திருமணத்திற்கு முன்பு ஏமி ஜாக்சன் கர்ப்பம் தரித்திருக்கிறார் என்பது தான்.மேலும் இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களிலில் குழந்தை பிறந்தது.ஆனால் தற்பொழுது ஏமி ஜாக்சன் அவர்கள் அவரது கணவரை கழட்டிவிட்டு வேறொருவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்.