தென் மாவட்டங்களை வளைக்க எடப்பாடி பழனிசாமி போடும் பலே திட்டம்
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மவுசு கூடிக்கொண்டே வரும் நிலையில் தென்மாவட்டங்களை கவர ஓபிஎஸ் பக்கமுள்ள 2 சீனியர்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடிக்கே கோர்ட் தீர்ப்பு சாதகமாகிவிட்ட நிலையில், ஒருவரும் ஓபிஎஸ் பக்கம் வரவில்லை. பாஜகவும் இவரை கை விட்டுவிட்டது, டிடிவி, சசிகலா போன்றோரும் பகிரங்க ஆதரவை இதுவரை தரவில்லை.இதனால் செய்வதறியாமல் ஓபிஎஸ் திகைத்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில் தான், டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சில விஷயங்களை மனம் விட்டும் பேசியதாக கூறப்படுகிறது.
தேர்தல் வரப்போகிறது, கட்சி ஒன்றாக வேண்டும், இப்படி இருப்பது கட்சிக்கு நல்லதல்ல, வேண்டுமானால் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடியே தொடரட்டும். இணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கொள்கிறேன். கட்சி தான் முக்கியம்’ என்றாராம்.
இதைதவிர, சில தூது நடவடிக்கைகளும் ஓபிஎஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ஓபிஎஸ் டீமில் உள்ள 2 ஆம் கட்ட நிர்வாகிகளோ, இப்பவே கண்ணை கட்டுதே என்று முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்களாம். நடப்பதெல்லாம் எடப்பாடிக்கு சாதகமாகவே சென்று கொண்டிருக்கும் நிலையில், நம் பக்கம் தொடர்ந்து பலவீனமாகி வரும் நிலையில், கட்சி மொத்தமாக எடப்பாடிக்கே சென்றுவிடுமா? என்ற கலங்கி கொண்டிருக்கிறார்களாம்.
அதிலும் ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட மா.செ.க்கள் மற்றும் புது நிர்வாகிகளின் புலம்பல்கள் அதிகரித்துவிட்டதாம். இதனிடையே, ஓபிஎஸ்ஸை தங்கள் கட்சியில் எடப்பாடி தரப்பு இணைத்து கொள்ளுமா? என்பதே மிகப்பெரிய சந்தேகமாக உள்ளதாம்.. கட்சிக்குள் இணைத்து கொண்டால், மறுபடியும் ஏதாவது பிரச்சனையை ஓபிஎஸ் கிளப்பினால் என்னாவது? அல்லது அதிமுகவில் இருந்து கொண்டு திமுகவுடன் நட்பு பாராட்டினால் என்ன செய்வது? அல்லது பாஜக மேலிடத்துக்கு சாதகமாகவே சாய்ந்து விட்டால் என்ன செய்வது? போன்ற சந்தேகங்கள் எடப்பாடி டீமை உலுக்கி வருகிறதாம்.
அதேசமயம், ஓபிஎஸ் டீமில் உள்ள 2 சீனியர்கள் தங்கள் பக்கம் வந்தால் போதும் என்றும் கணக்கு போடுகிறதாம்.. அதில் ஒருவர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆவார்கள்.. இதில் வைத்திலிங்கத்துக்கு முக்கிய பதவி தந்தால் தங்கள் பக்கம் வரக்கூடும் என்றும் எடப்பாடி டீம் நம்புகிறதாம்.. ஜேசிடி பிரபாகர் தங்கள் பக்கம் வராத பட்சத்தில் மனோஜ் பாண்டியனுக்கு வலையை விரிக்கலாம் என்றும் ஒரு பேச்சு உள்ளதாம்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன..
கொங்கு மற்றும் மத்திய வடமாவட்டங்களில் செல்வாக்கை பெற்றுள்ள எடப்பாடியால், தென்மண்டலத்தில் முழுமையான ஆதரவை பெற முடியவில்லை.. இத்தனைக்கும் உதயகுமார், செல்லூர் ராஜு போன்ற சீனியர்கள் இருந்தும், எடப்பாடி டீம் பக்கம் புதிதாக யாரையுமே தென்மண்டலத்தில் இருந்து நகர்த்தி கொண்டு வரமுடியவில்லை.. எனவே, வைத்திலிங்கம் போன்றோர் உடனிருக்கும் பட்சத்தில் தஞ்சை உள்ளிட்ட தெற்கை வளைக்கலாம் என்பதே எடப்பாடி தரப்பின் யோசனையாக உள்ளதாம்.. தொடர்ந்து தூது நடவடிக்கைகள் இரு தரப்பும் நடந்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், எந்த ஒரு உறுதியான விஷயமும் இதுவரை வெளியாகவில்லை.. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!