அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம்
சென்னை :
தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக இது கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது அப்படி கூட்டணி அமைத்தால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என கூறியுள்ளார். மத்திய பாஜக உள்த்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசிய போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அண்ணாமலையின் அடுத்த செயல்பாடு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ச்சியடைய செய்வதற்கு வரும் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் வகிக்கும் பதவியில் இருந்து விலகி ஒரு தொண்டனாக மட்டுமே செயல்படுவேன் என்று குறிப்பிட்டார். அண்ணாமலை கூறிய வார்த்தைகளால் பாஜக நிர்வாகிகளுக்கு இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
கூட்டணி வைப்பது பற்றி பேசுவதற்காக அண்ணாமலை டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் பாஜக தனித்து செயல்பட வேண்டும் என்றும் 2026 நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டில் இரண்டாது கட்சியாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா தமிழ்நாட்டில் பாஜக அதிமுக வுடன் கூட்டணியில் தான் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் நாங்கள் வலுவின்றி இருக்கும் இடங்களில் கூட்டணிக்கட்சிகள் எங்களுக்கு உதவும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று பேசியிருக்கிறார்.
அண்ணாமலை கூட்டணி அமைக்ககூடாது என்ற நிலையில் அமித்ஷா கூட்டணியில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்…