ஆளுநர் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!!
வீண் பழிகளை கண்டு என்று தான் நாம் அஞ்சி இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கும், தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக வினருக்கும் இடையே மோதல் போக்கு நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
திமுக அரசு குறித்து தமிழக ஆளுநர் அவர்கள் குற்றம் சாட்டியத்தை அடுத்து, அதற்கு பதிலடியாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது கட்சியினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் திமுக அரசை கடுமையாகவும் சாடியுள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது,
“திராவிட மாடல் என்று ஒன்று இல்லை” திராவிட மாடல் என்பது அரசியல் வாசகம் மட்டுமே; காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்க வைக்கும் முழக்கமே திராவிட மாடல்; ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற முழக்கத்துக்கு எதிரானது திராவிட மாடல்; சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடலின் நோக்கம் என்று விதவிதமாக, கடுமையாக திமுக அரசு மீது ஆளுநர் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தமிழக அரசியலில் பேசும் பொருளானது. ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.உடனே, இதுகுறித்து திமுக கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், திமுகவை விமர்சித்தே வயிறு வளர்ப்பவர்கள் இங்கு இருக்கிறார்கள். திமுகவை விமர்சித்தால் தான் தங்களுக்கு அடையாளமும், முகவரியும் கிடைக்கும் என்று திமுக மீது அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள்; இதைக் கண்டு என்றுதான் நாம் அஞ்சியிருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இன்று, நேற்றா இதைப் பார்க்கிறோம் ? இந்த வீண் பழிகளைக் கண்டு என்றுதான் நாம் அஞ்சியிருக்கிறோம்? என்றும் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.