இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நிலவில் ஆழத்தில் உள்ள வெப்ப நிலை குறித்து விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனம் கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் தரையிறங்கியது.

இதனையடுத்து, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்று இஸ்ரோ உலக சாதனைப் படைத்தது.

இந்நிலையில் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்தது குறித்த தகவலை லேண்டர் அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக தன்னுடைய சமூகவலைத்தளத்தில் இஸ்ரோ ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், நிலவின் தென் துருவத்தின் சராசரி வெப்பநிலையை பிரக்யான் ரோவர் பூமிக்கு அனுப்பி இருக்கிறது. நிலவிற்கு சென்றுள்ள சந்திரயான் – 3 விண்கலத்தில் லேண்டர் மற்றும் ரோவர்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. லேண்டரில் உள்ள ChaSTE என்ற கருவி நிலவின் மேற்பரப்பு குறித்த ஆய்வுகளை செய்து வருகிறது. நிலவின் மேற்பரப்புக்கு அடியில் 10 செ.மீ ஆழம் வரை செல்ல கூடிய வகையில் இந்த கருவி செயல்படும்.

நிலவின் மேற்பரப்பிலிருந்து ஆழம் வரை லேசர் ஊடுருவி கருவி நிலவின் தென் துருவப்பகுதியில் நிலவும் வெப்பநிலை குறித்த தகவல்களை அனுப்பியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. ஆழம் செல்ல செல்ல படிப்படியாக வெப்பநிலை குறைந்து -10 டிகிரி செல்சிஸ் ஆக இருப்பதாக தெரியவந்துள்ளது. நிலவிலேயே இருண்ட பகுதி என்று தென் பகுதியில் முக்கியமான ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டிருப்பது உலக மக்களிடையே ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

Leave a Comment