ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!!
பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் பீகார் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகார் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 675 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பீகார் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது.
பீகார் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாட்னா மற்றும் பாகல்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பாகல்பூர் மாவட்டத்தில் 300 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாட்னா மாவட்டத்தில் 298 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிக டெங்கு பாதிப்பு இருப்பதால் பாட்னா, பாகல்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களுக்கும் மாநில சுகாதாரத்துறை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 134 டெங்கு பாதிப்புகளால் மாநிலமே அச்சத்தில் உள்ளது. இந்த 134 பாதிப்புகளில் 21 பாதிப்புகள் பாகல்பூர் மாவட்டத்தில் பதிவாகி உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாயாகஞ்ச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கு மத்தியில் பாட்னா மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சலால் பாதிகப்பட்டவர்களுக்கு உதுவம் வகையில் கால் சென்டர் ஒன்றையும் அமைத்துள்ளது. மேலும் உதவி எண்களையும் வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் ரத்த தானம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.