இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!
பிறப்புச் சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு நம் நாட்டின் அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய நாட்டில் பிறக்கும் அனைவரும் விருப்புச் சான்றிதழை பெறுவது அவசியமான ஒன்று. இந்திய நாட்டில் எந்த குழந்தை பிறந்தாலும் பிறப்பு பதிவு செய்வது அவசியம். நாம் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் பொருட்டு முதல் அடையாளச் சான்றாக பிறப்பு சான்றிதழ் விளங்குகிறது. இந்தப் பிறப்பு சான்றிதழை வைத்துதான் ஆதார் அட்டை, பள்ளியில் சேர்வது என அரசின் பல்வேறு விஷயங்களுக்கும் அரசின் சலுகைகளுக்கும் முதல் ஆவணமாக பிறப்புச் சான்றிதழ் விளங்கி வருகிறது. ஆனால் நம் ஆதார் அட்டை பெற்று விட்டால், பிறகு அனைத்திற்கும் ஆதாரமாக ஆதார் ஆட்டை தான் பயன்படுகிறது. நாம் வளர, வளர கல்வி சான்றிதழ் உள்ளிட்ட சில தனிப்பட்ட முக்கிய ஆவணங்களை பெற்ற பிறகு பிறப்புச் சான்றிதழ் ஒரு ஆவணமாக கருதுவதில்லை.
ஆனால் பிறப்புச் சான்றிதழ் அவசியம் என்றும் அதனையும் மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலவி வந்தது. தற்போது அந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து கொண்டது. பிறப்புச் சான்றிதழைஅடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.
அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை பெற பிறப்பு சான்றிதழை ஆவணமான பயன்படுத்தலாம் என்றும் ஓட்டுநர் உரிமம் பெற பிறப்புச் சான்றிதழை ஆவணமான பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் பலரது பிறப்புச் சேனல் சரிவர பராமரிக்கப்படாமல் சேதம் அடைந்து கிடைப்பதால் பிறப்புச் சான்றிதழில் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். ஆதார் அட்டையை அனைத்திற்கு போதுமானது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும் பிறப்புச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதனையும் ஒரு அத்தாட்சி ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தனது அறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளது.