இன்று கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்!!
திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகரான விஜய் கடந்த இரண்டாம் தேதி கட்சி தொடங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் இன்று காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
கட்சி தலைவரின் உத்தரவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆட்சேர்ப்பு, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் குறித்து நடத்தப்படும் கூட்டத்தில் மாவட்ட தலைமை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.