மணிக்கட்டில் கயிறு நெற்றியில் பொட்டு கூடாது! ஆனால் பர்தா சிலுவைக்கு என்னாச்சு?
சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்க்கு சாதிய பாகுபாடே காரணம் என பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதனையடுத்து இனிவரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடு சார்ந்து எந்த பிரச்சனையும் ஏற்பட கூடாது என்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவானது அமைக்கப்பட்டது.
இந்த குழு தயாரித்த அறிக்கையை கடந்த வாரம் நீதிபதி சந்துரு தமிழக அரசிடம் வழங்கினார். இதில் பள்ளி மாணவர்கள் கையில் கயிறு மற்றும் நெற்றியில் பொட்டு உள்ளிட்டவகைகளை வைக்க கூடாது என தெரிவித்திருந்தது.
இந்த நிபந்தனைகள் அனைத்தும் இந்து மதத்தினருக்கு எதிரானது என அப்போதே விமர்சனம் எழுந்தது. குறிப்பாக அவர் அளித்திருந்த அறிக்கையில் கூறப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் இந்து மாணவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக கிறித்துவ மற்றும் முஸ்லீம் மத குறியீடுகளை பயன்படுத்த தடையில்லை என்பது போல அந்த அறிக்கையானது அமைந்திருந்தது.
இந்த அறிக்கை வெளியானதையடுத்து இந்து மத ஆர்வலர்கள் மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கையிருக்கு, திலகத்துக்கு கட்டுப்பாடு விதிச்சிட்டீங்க ஆனால் சிலுவை மற்றும் புர்காவுக்கு என்னாச்சு என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.