Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்

தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்

தஞ்சை அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை பகுதியை சேர்ந்தவர் குமார்,37 வயதாகும் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இறந்த விட்ட நிலையில், தன்னுடைய 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் அவர்களது வீட்டிற்கு அருகேயுள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு வந்த சிறுமியின் செயல்பாடுகளில் ஏதோ மாற்றம் தெரியவே பள்ளி ஆசிரியர்கள் அந்த சிறுமியை விசாரித்த போது, அவருடைய தந்தை குடித்து விட்டு வந்து கடந்த ஒராண்டாக அந்த சிறுமையை மகளென்றும் பார்க்காமல் பாலியல் பலாத்காரம் செய்ததும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என அந்த சிறுமியை மிரட்டியதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சிறுமிக்கு நடந்த இந்த கொடுமை குறித்து ஆசிரியர்கள் சைல்டு லைனில் புகார் அளித்தனர். மேலும் அந்த சிறுமியை மீட்டு அரசு காப்பாகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில், சிறுமியின் தந்தை குமாரை இனஸ்பெக்டர் ஜெயா கைது செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் காப்பாகத்தில் இருந்த சிறுமி திடீரொன மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்து பார்த்த போது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது தந்தையான குமாரையும் மருத்துவ பரிசோதனை செய்த போது அவருக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது இதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை மூலமாக சிறுமிக்கும் எய்ட்ஸ் நோய் பரவியிருப்பது உறுதியானது. இவ்வழக்கு விசாரணையானது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குற்றவாளி குமாருக்கு 4 ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டலுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.4,500 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பில் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் மற்றும் உயர்தர சிகிச்சையும் அளிக்க தமிழக அரசுக்கு அவர் பரிந்துரை செய்து தீர்ப்பளித்தார்.

Leave a Comment