கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 15000 கோடி ஒதுக்கீடு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும், கொரோனா வைரஸ் பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் அதிகரித்து வரும் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கு நிதியுதவியாக ரூபாய்.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
குறிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு ரூ.21,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், தற்போது மேலும் கூடுதலாக இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, மாநில அரசுகள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு இந்த ரூ.15,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து பாதிப்பிற்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கு இந்த நிதியை பிரித்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தத் தொகையை 3 தவணைகளாக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இத்துடன் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த N95 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சமையல் எரிவாயு மானியம் கிடைக்குமா..? மத்திய அரசின் குட் நியூஸ்!
இந்த ஆண்டு சமையல் எரிவாயு மானியம் கிடைக்குமா..? மத்திய அரசின் குட் நியூஸ்! பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ்...