திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி சொன்ன பதில்! பல நாள் ரகசியம் வெளி வந்தது!
தமிழ்,தெலுங்கு என்று இரு திரைப்படத்துறைகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி.’ரெண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் அடுத்து விஜய்,சூர்யா,கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.இவர் நடித்த அருந்ததி,பாகுபலி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் படங்களாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பிறகு மிஸ் ஷெட்டி,மிஸ்டர் போலிஷெட்டி நடித்துள்ளார்.விரைவில் இப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றது.இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பாகுபலி புகழ் பிரபாஸுடன் மீண்டும் ஒன்றாக இணைந்து நடிப்பீர்களா? என்று ஒருவர் கேட்டதற்கு,எங்களது ஜோடியை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.இதற்கு அந்த கதையம்சம் மற்றும் படத் தொகுப்புகள் போன்றவைதான் காரணம்.மீண்டும் எங்கள் இருவருக்கும் பொருத்தமான கதைகள் அமைந்தால் நாங்கள் திரும்பவும் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று பதிலளித்தார்.
இதையடுத்து அவரிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு சிரித்தபடி உண்மையாகவே இதற்கு எந்த பதிலும் என்னிடம் இல்லை.அது எப்பொழுது நடக்க வேண்டுமென்று இருக்கோ நடக்கட்டும் என்று கூறினார்.இந்நிலையில் இவரும் நடிகர் பிரபாஸும் காதல் செய்கிறார்கள்,திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று பல முறை கிசு கிசுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.