சிந்து சமவெளி நாகரிகம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அமலாபால் மைனா திரைப்படத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.இதனையடுத்து இவர் நடித்த படங்கள் இவரை பிரபல நட்சத்திர நடிகையாக மாற்றியது.
இந்நிலையில் அவர் திடீரென நடிப்பை விட்டு திருமண வாழ்வைத் தேடிச்சென்றார்.ஆனால் அவர் ஆசைப்பட்டு சென்ற திருமண வாழ்வோ அவருக்கு செட் ஆகாமல் விவாகரத்து பெற்றார்.இதனையடுத்து மீண்டும் சினிமாவிற்கே திரும்பி வந்த அமலாபால் வெறும் கிளாமர் மற்றும் முக்கியத்துவமில்லாத கதாப்பாத்திரத்திரத்தில் நடிப்பதனை நிறுத்தி விட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.
இதன் அடிப்படையில் சமீபத்தில் அவர் நடித்த ஆடை திரைப்படமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இவ்வாறு அமலாபால் மீண்டும் சினிமாவில் நுழைந்து தனது திறமையை காட்டி வந்தாலும்,மறுபுறம் இந்த லாக் டவுன் காலத்தில் சமையல் செய்வது, யோகா, இயற்கையை ரசிப்பது, பார்ட்டி கொண்டாடுவது என தனது வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
மேலும் இதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இநிலையில் அவர் தன்னுடைய 28 வது பிறந்தநாளை வித்யாசமாக கொண்டாடி அதன் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.இந்த தகவலானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.