4 வது முறையாக ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் முதல்வராக பதவியேற்றார்.
ஆந்திராவில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வந்தார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு ஆந்திராவிற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. அதில் காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து களமிறங்கியது. அதேபோன்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியுடன் போட்டியிட்டது. இக்கூட்டணியில் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் இணைந்தன.
ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. மேலும் பவன் கல்யாணியின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது மொத்தமாக இத்துடன் 164 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஆனால் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆந்திராவில் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உள்ளார். மேலும் நேற்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு எம்எல்ஏக்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்று காலை 11.17 மணிக்கு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றார். இவருக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவானது விஜயவாடா அருகே உள்ள கேசரா பள்ளி ஐடி வளாகத்தில் நடைபெற்றது. இதன் மூலம் நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். மேலும் இவ்விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி சந்திர பாபு நாயுடுவை கட்டித்தழுவி மேடையிலேயே வாழ்த்து தெரிவித்தார்.