தமிழகத்தில் தொடரும் அச்சம்! ஒரே நாளில் 102 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகெங்கும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசானது இந்தியாவையும் விட்டு வைக்காமல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அரசும் இந்த வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்று வரை தமிழகத்தில் 309 நபர்களுக்கு கொரோனா பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 102 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தற்போது உறுதியாகி உள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் தமிழகத்தில் இதுவரை ஏழு பேர் கொரோனா தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளத்கவும்,1580 பேர் தொடர்ந்து மருத்துவமனைக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தமிழகத்தில் இதுவரை 411 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் 484 நபர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது தற்போதைய நிலையில் 411ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.