Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

இன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..??

நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 19 ஆம் நாள், புதன் கிழமை (04/10/2020)

விரதம்: சங்கடஹர சதுர்த்தி

திதி: திருதியை அதிகாலை 02:03 வரை பின்பு சதுர்த்தி

நட்சத்திரம்: ரோகினி அதிகாலை 01:59 வரை பின்பு மிருகசீரிஷம்

சந்திராஷ்டமம்: அனுஷம்

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

நல்ல நேரம்:
காலை: 09:15 – 10:15
மாலை: 04:45 – 05:45

தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 12:00 – 01:30 PM
குளிகை: 10:30 AM – 12:00 PM
எமகண்டம்: 07:30 – 09:00 AM

வழிபாடு: விநாயகரை வழிபட வினைகள் தீரும்

ராசி பலன்கள்:

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! தொழிலில் ஆதரவான சூழல் நிலவும். இன்னல்கள் நீங்கும். அனுகூலம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். மனை தொடர்பான காரியங்களில் சாதகமான சூழல் நிலவும். ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். பொது சேவையில் இருப்பவர்களுக்கு புகழ் உண்டாகும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! கலைஞர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் சில மாற்றங்கள் உண்டாகலாம். சுயதொழில் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். போட்டிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களே! வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். சுய தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! சுப செய்திகள் வந்து சேரும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வேலைவாய்ப்பு தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். கவலைகள் நீங்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! வியாபாரத்தில் கவனம் வேண்டும். தாயாரின் உடல் நிலையில் கவனம் வேண்டும். தொழில் விருத்தி செய்வதற்கான சிந்தனைகள் தோன்றும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பியுங்கள். பயணங்களின் போது கவனம் வேண்டும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழந்ததை மீட்க முயற்சி செய்வீர்கள். அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பண உதவி கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! வியாபார பங்குதாரர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். வாரிசுகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். நண்பர்களை சந்தித்து அதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களே! முயற்சிக்கேற்ற முன்னேற்றம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டாகும். கடன் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வங்கிகளின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பயணங்களின் மூலம் லாபம் கிடைக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! பெரியவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல சூழல் நிலவும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மனதில் தெளிவு தோன்றும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களே! தாயாரின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். கால்நடைகளின் மூலம் லாபம் கிடைக்கும். பேச்சு சாதுரியத்தின் மூலம் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

Leave a Comment