நாள்: சார்வரி வருடம், புரட்டாசி 27 ஆம் நாள், செவ்வாய் கிழமை (13/10/2020)
விரதம்: சர்வ ஏகாதசி
திதி: ஏகாதசி காலை 10:22 வரை பின்பு துவாதசி
நட்சத்திரம்: மகம் பிற்பகல் 08:00 வரை பின்பு பூரம்
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
நல்ல நேரம்:
காலை: 10:45 – 11:45
மாலை: 04:45 – 05:45
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 03:00 – 04:30 PM
குளிகை: 12:00 – 01:30 PM
எமகண்டம்: 09:00 – 10:30 AM
வழிபாடு: பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்
ராசி பலன்கள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! வாரிசுகளின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும். சொத்துக்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த உகந்த நாள். வெற்றி உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடங்களில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கஷ்டங்கள் குறையும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! உடன்பிறப்பு களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வேலை தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணியிடங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே! மாணவர்களின் கல்வி சிந்தனைகள் மேம்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். மனதில் நிம்மதி தோன்றும். கல்வியில் ஆர்வம் காண்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மனதில் குழப்பங்கள் தோன்றும். சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! உடன்பிறப்புகள் இடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் வாங்க ஆர்வம் காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுப செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கான வாய்ப்பு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் குறையும். தெளிவு உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சாதகமான சூழல் நிலவும். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணியிடங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இன்று உங்களுக்கு மேன்மையான நாள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். நிம்மதி குறையும். மற்றவர்கள் செயலில் தலையிடாமல் இருப்பது நல்லது. செலவுகள் ஏற்படும். சேமிப்புகள் குறையும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! தொழிலில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். கணவன், மனைவி இடையே உறவு மேம்படும். வாரிசுகளின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுய தொழில் பற்றிய சிந்தனைகள் தோன்றும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே! பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் அனுபவசாலிகளின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும்.