Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

இன்றைய ராசி பலன்கள்: 16/10/2020

நாள்: சார்வரி வருடம், புரட்டாசி 30 ஆம் நாள், வியாழன் கிழமை (16/10/2020)

விரதம்: அமாவாசை இன்று அதிகாலை 03:54 முதல் நாளை அதிகாலை 02:03 வரை

திதி: சதுர்த்தி அதிகாலை 03:53 வரை பின்பு அமாவாசை

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 03:53 வரை பின்பு சித்திரை

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி

யோகம்: சித்தயோகம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

நல்ல நேரம்:
காலை: 09:15 – 10:15
மாலை: 04:45 – 05:45

தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 10:30 AM – 12:30 PM
குளிகை: 07:30 – 09:00 AM
எமகண்டம்: 03:00 – 04:30 PM

வழிபாடு: முன்னோர்களை வழிபட காரியத்தடைகள் நீங்கும்

ராசி பலன்கள்:

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உறவினர் களிடம் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடங்களில் மதிப்பும், மரியாதையும் உயரும். மனதில் சில விதமான குழப்பங்கள் தோன்றும். ஆலய வழிபாடு செய்வதற்கு சிறந்த நாள்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். விவசாயத்தில் நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களே! உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். மனதில் நிம்மதி தோன்றும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். புதிய செயல்களுக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! பணியிடங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் பெருகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானம் வேண்டும். உங்கள் மீதான மதிப்பும், நம்பிக்கையும் உயரும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகங்களில் சிறு குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் பேச்சுக்கு பலரின் ஆதரவுகள் கிடைக்கும். லட்சியத்தை அடைய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். பணியிடங்களில் அலைச்சல்கள் ஏற்படும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். தொழில் தொடர்பான காரியங்களை சுப செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இன்று உங்களுக்கு சாதகமான நாள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். பெரியோர்களின் வழிகாட்டுதலின் மூலம் நன்மை கிடைக்கும். பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புது வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உதவிகள் செய்யும் போது சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களே! போட்டிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிரபலமானவர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே உறவு மேம்படும். இன்று உங்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! உத்தியோகத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். உணவுகளின் மூலம் மனவருத்தங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புது சிந்தனைகள் தோன்றும். பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களே! சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களின் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பணியிடங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். துணைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு சிறந்த நாள்.

Leave a Comment