Breaking: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்

Breaking: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் சேலத்திலிருந்து சென்னை வந்தடைந்தார்.இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து பரவிவரும் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு கட்டுபாடுகளை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

edappadi palanisamy has been admitted in hospital
edappadi palanisamy has been admitted in hospital

அவரை அங்கு குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை செய்யவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தநிலையில், தற்போது அவர் சென்னை வந்துள்ள நிலையில் இந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வருக்கு குடலிறக்க (ஹெர்னியா)அறுவை சிகிச்சைக்கு முன்னதாக செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Comment