அரசு பள்ளி வகுப்பறைகளின் பூட்டுகளில் பூசப்பட்ட மலம் !! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயக்கி வருகின்றது.இங்கு 400க்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவியருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.பள்ளியில் உள்ள பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பறைகளின் கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மலத்தை கொட்டியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து விட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த தகவலை கேள்விப்பட்டு அதிர்ந்த பெற்றோர்களும் இதனை கண்டிக்கும் விதமாக பள்ளியின் நுழைவாயிலில் போராட்டம் நடத்தினர்.
அப்போழுது அவர்கள் கூறியதாவது,இது போன்ற சம்பவங்கள் இந்த பள்ளியில் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.பள்ளியின் உட்கட்டமைப்பு சரி இல்லாத காரணத்தினால் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவது, தரக்குறைவான செயல்களில் ஈடுபடுவது,குடிநீர் தொட்டியை சேதப்படுத்துவது என்று தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை.தற்பொழுது தங்கள் பிள்ளைகள் படிக்கும் வகுப்பின் கதவுகளில் மர்ம நபர்கள் மலத்தை கொட்டி வைத்துள்ளனர்.
இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கண்டித்தும்,பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவியருக்கு உரிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுளோம் என்று தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர்,திருத்தணி வட்டாட்சியர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கழிவுகளை பூசிய நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள படுமென்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் நடத்தி வந்த போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.