குஷ்பு முதல் சமந்தா வரை.. காதலுக்காக மதம் மாறிய டாப் 10 நடிகைகள் !!
இந்திய திரைத்துறையில் பல பிரபலங்கள் பல்வேறு காரணங்களுக்காக மதம் மாறியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.அந்தவகையில் காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை உள்ள டாப் 10 நடிகைகளில் விவரம் இதோ
இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் நடிகை குஷ்பு
1980 களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார்.
இந்நிலையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த குஷ்பு தன் காதலுக்காக இந்து மதத்திற்கு மாறி இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி அவர்களை கரம்பிடித்தார்.அதன் பிறகு அவர் இன்றுவரை இந்து மதத்தை தான் பின்பற்றி வருகிறார். திருமணமாகி பல வருடங்கள் கழிந்த பிறகும் இவர்களின் காதலும், அன்பும் இன்றும் அப்படியேதான் இருக்கிறது. இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் நடிகை ஹேமா மாலினி
இவர் தமிழ் ஐயங்கார் பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.இவர் ஒரு முன்னாள் பாலிவுட் நடிகை ஆவார்.மேலும் இவர் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தர்மேந்திராவுடன் காதல் வயப்பட்டார்.மேலும் தர்மேந்திரா எற்கனவே பிரகாஷ் கவுர் என்பவரை மணந்து இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் முதல் மனைவி விவாகரத்து தர மறுத்ததால் இவரும் ஹேமா மாலினி அவர்களும் இந்து மதத்திலிருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் நடிகை நக்மா
90 களில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தவர் நக்மா. கார்த்தியுடன் இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்துள்ளன.பிஸ்தா படம் இன்றளவும் பிரபலம். இவர் பெற்றோர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் இவரோ தாயின் இஸ்லாம் மதத்திற்கும் மாறாமல், தந்தை இந்து மதத்திலும் சேராமல் கிருஸ்துவ மதத்தை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து கரம் பிடித்தார். இந்நிலையில் திருமணத்திற்காக காதலன் மதத்திற்கு மாறினார் நக்மா.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் நடிகை ஜோதிகா
சினிமாவில் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்த ஜோதிகா தன் காதலுக்காக மதம் மாறினார். இவரின் பெற்றோர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் முஸ்லிம் பெண்ணாக வளர்ந்த ஜோதிகா பிரபல நடிகர் சூர்யாவை காதலித்தார்.இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார்,மாயாவி,காக்க காக்க,ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.முதலில் இந்த காதலுக்கு முதலில் சூர்யாவின் தந்தை சிவக்குமார் சம்மதிக்கவில்லை. அதன் பிறகு சில பல பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஜோதிகா,சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு தற்பொழுது ஜோதிகா இந்து பெண்ணாகவே மாறி விட்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார் நடிகை நயன்தாரா
இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வருகிறரர்.தற்போது நயன்தாரா தென்னிந்திய திரைப்பட உலகில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்னும் புனைப்பெயரினை கொண்டுள்ளார்.கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நயன்தாரா நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்துவாக மாறினார். ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நடைபெறாமல் போனது.இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார்.பிறகு திருமண பந்தத்தில் இருவரும் இணைந்தனர்.தற்பொழுது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார் நடிகை மோனிகா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாக உயர்ந்தவர் நடிகை மோனிகா. இவர் அழகி, சண்டைக்கோழி, பகவதி, சிலந்தி, நதிகள் நனைவதில்லை உள்பட பல படங்களில் நடித்தவர். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.மதுரையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன தொழில் அதிபர் மாலிக் என்பவரை காதலித்தார்.இதற்காக கிருத்துவ மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய மோனிகா, தனது பெயரை எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிக் கொண்டார்.மதுரையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன தொழிலதிபர் மாலிக்கை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.அத்துடன் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.
இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார் நடிகை லிசி
இவர் ஒரு கிருத்துவ மதத்தை சேர்ந்தவர்.80களின் முன்னணி கதாநாயகியான லிசி,நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பான விக்ரம் படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களுக்கு அறிமுகமானார்.பின்னர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலில் நடித்து மிகவும் பிரபலமானார்.இந்நிலையில்
லிசி பிரபல திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து கிருத்தவ மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறி தனது பெயரை லட்சுமி என்று மாற்றி வைத்துக்கொண்டார்.பிறகு 1990 இல் பிரியதர்ஷனை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரியதர்ஷன் அவர்களை விவாகரத்து செய்தார்.பிறகு திரும்பவும் கிருத்துவ மதத்திற்கு மாறி தனது பெயரை பழைய பெயரான லிசி என்று மாற்றி வைத்துக்கொண்டார்.
இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார் நடிகை ஆயிஷா தாகியா
பாலிவுட் படங்களில் தோன்றிய ஒரு இந்திய முன்னாள் நடிகை ஆவார். இவர் டார்சன்: தி வொண்டர் கார் திரைப்படத்தில் அறிமுகமானார்,ஆயிஷா தாகியாவின் தாய் ஆங்கிலோ-இந்தியப் பின்னணியைச் சேர்ந்தவர், அவரது தந்தை இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்.இந்நிலையில் ஆயிஷா, ஃபர்ஹான் ஆஸ்மியை திருமணம் செய்து
கொள்வதற்காக இந்து மதத்திலிருந்து முஸ்லீமாக மாறினார்.
இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார் நடிகை ஜோமோல் ஜான்
இவர் ஒரு மலையாள நடிகை,கிருத்துவ மதத்தை சேர்ந்தவர் ஆவார்.தமிழில் ‘பிரியாத வரம் வேண்டும்’ என்ற படத்தில் துணை நடிகையாக நடித்திருப்பார்.இவர் 2002 இல் சந்திரசேகர் பிள்ளையை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், பின்னர் இந்து மதத்திற்கு மாறி தனது பெயரை கௌரி சந்திரசேகர் பிள்ளை என்று மாற்றினார். தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார் நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை ‘சமந்தா’.இவரின் அழகிற்கும்,நடிப்பிற்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.இவர் ரீமேக் படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.தனது அசாத்திய நடிப்பின் மூலம் தமிழ்,தெலுங்கில் உட்ச நடிகைகளில் ஒருவரானார்.இதன் பிறகு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர்.பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது கடந்த 2017 ஆம் ஆண்டு அன்று கோவாவில் நடந்தது. நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது.பின்னர் 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர்.இதன் பிறகு சமந்தா பல்வேறு இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.