GOLD RATE: ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனையாகி வருகிறது.
இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வருகிறது.சாமானியர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத விலையில் தங்கம் விற்பனையாகி வருகிறது.
முன்பெல்லாம் தங்கம் சவரனுக்கு ரூ.100,ரூ.150 என்று தான் உயரும்.ஆனால் இன்று சவரனுக்கு ரூ.500,ரூ.600 வரை உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
தங்கம் விலை ஒரு நாள் ஜெட் வேகத்தில் உயர்வதும் மறுநாள் பெயருக்கு குறைவதுமாக இருந்து வருகிறது.கடந்த வாரத்தில் தங்கம் விலை மளமளவென உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,000த்தை கடந்து அதிர்ச்சி கொடுத்தது.இந்நிலையில் வாரத்தின் தொடக்கத்தில் அதன் விலை சற்று சரிவை சந்தித்து இருக்கிறது
நேற்று விலைமாற்றம் இன்றி முந்தின நாள் விலைப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,665க்கும் ஒரு சவரன் ரூ.54,840க்கும் விற்பனையானது.இந்நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்து இருக்கிறது.
அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 குறைந்து,ரூ.54,320க்கும்,ஒரு கிராம் ரூ.65 குறைந்து ரூ.6,790க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் தூயத் தங்கம்(24 கேரட்) சவரனுக்கு ரூ.568 குறைந்து ரூ.59,256க்கும் விற்பனையாகின்றது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.89.50க்கும்,ஒரு கிலோ ரூ.89,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.