ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 4000திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி,மோகன்லால்,சுனில்,சிவராஜ் குமார்,தமன்னா,யோகிபாபு,ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. இந்நிலையில் திரையரங்குகள் முன்பு ரஜினி ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன்,ரஜினியின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து வெடி போட்டு கொண்டாடினர். ரஜினி நடிப்பில் ‘அண்ணாத்த’ படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.இப்படம் ரஜினிக்கு வெற்றி படமாக அமையவில்லை. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ரஜினி கண்டிப்பாக இப்படத்தின் மூலம் ‘கம்பேக்’ கொடுப்பார் என்று உலகெங்கும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் படத்தை பார்பதற்க்காக திரையரங்குகளில் எறும்பு கூட்டம் போல் மொய்த்து வருகின்றனர்.
மேலும் ஜெயிலர் படத்தின் முதல் காட்சிகளை பார்க்க போகின்ற ஆர்வத்தில் முண்டியடித்து கொண்டு விசில் சத்தத்துடன் திரையரங்குகளில் ரசிகர்கள் நுழைந்தனர்.இதனை தொடர்ந்து படம் வெளியாக தொடங்கியது. இந்நிலையில் ரஜினி படத்திற்கு அடையாளமாக காண்பிக்கப்படும் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு மற்றும் அதற்கன வரும் பின்னணி இசை காட்சியை பார்த்ததும் ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு கைதட்டி,விசில் அடித்து சூப்பர் ஸ்டார் என்றும் என் தலைவன் வந்துட்டான் என்றும் திரையரங்கமே அதிரும் அளவிற்கு கூச்சல் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் முதல் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தை இயக்கிய நெல்சன் சம்பவம் செய்து விட்டார் என்று அவரை புகழ்ந்து வருகின்றனர்.மேலும் இப்படம் நெல்சன் மற்றும் ரஜினிக்கு நல்ல கம்பேக் கொடுத்துள்ளது. நெல்சனின் கதை,சூப்பர் ஸ்டாரின் நடிப்பு,அனிருத்தின் இசை என்று படம் வேற லெவல் என்று தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான ரசிகர்களின் கருத்து
படத்தின் முதல் பாதி காமெடி, செண்டிமெண்ட் கலந்த காட்சியாக உள்ளது.முத்துவேல் பாண்டியனாக ரஜினி சம்பவம் செய்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவின் காமெடி ஒர்க்அவுட் ஆகியிருக்கு.சூப்பர் ஸ்டார் மற்றும் யோகிபாபு நகைச்சுவை காமினேஷன் நன்றாக இருக்கின்றது.மேலும் முதல் காட்சியில் ஒரு குடும்ப தலைவனாக,பொறுப்புள்ள கணவனாக,தகப்பனாக முத்துவேல் பாண்டியனின் காட்சி இடம் பெற்றிருக்கின்றது.மேலும் முதல் பாதியில் ஆக்ஷன் காட்சிகள் இல்லாததால் ரசிகர்கள் அதிக சத்தம் இல்லாமல் படத்தை பார்த்தனர்.கதை படி முத்துவேல் பாண்டியனின் மகன் கடத்தப்பட்டிருப்பர்.இது தான் படத்தின் முதல் பாதி காட்சி.அதுவரை அமைதியாக இருந்த ரசிகர்கள் திடீரென்று விசில் சத்தத்துடன் கொண்டாட ஆரமித்து விட்டனர்.காரணம் அதுவரை குடும்பஸ்தனாக இருந்த முத்துவேல் பாண்டியன் இடைவெளி சீனில் தனது ஆக்ஷனை காட்ட தொடங்கியிருப்பர்.முதல் பாதி தரமாக இருந்தது.இதனை தொடர்ந்து இரண்டம் பாதியில் ‘காவாலா’ பாடல் காட்சி அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் தமன்னா,சுனில் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.மேலும் டைகர் பிளாஷ்பேக் மற்றும் முத்துவேல் பாண்டியன் கடத்தப்பட்ட தன் மகனை கண்டு பிடித்தாரா?இல்லையா? என்று டுவிஸ்ட்க்கு மேல் டுவிஸ்ட்டை அடுக்கி கிளைமாக்ஸ் காட்சி வரை நெல்சன் படத்தை நகர்த்தி கொண்டு சென்றுள்ளார்.
மேலும் வில்லன் காட்சிகள் மற்றும் அனிருத் பீஜியம் என்று படம் முழுக்க நன்றாக இருந்தது. இவையாவும் படம் பார்த்த ரசிகர்ககளின் பொதுவான விமர்சனமாக உள்ளது.மேலும் ஒரு சிலர் படத்தில் ஆங்காங்கே கொஞ்சம் சலிப்பு தட்டுக்கின்றது. நகைச்சுவை சீன்ஸ் பெரிதாக ரசிக்கும் படியாக இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
ஜெயிலர் படத்தின் கதை:
இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியனாகவும், ரம்யா கிருஷ்ணன் அவரின் மனைவி கதாபாத்திரத்திலும், வசந்த் ரவி அவரது மகன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
கதை படி காவல்துறையில் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்ற முத்துவேல் பாண்டியன் தன் மனைவி,மகன் மற்றும் பேரன் உடன் அரக்கோணத்தில் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.மேலும் முத்துவேல் பாண்டியனின் மகன் காவல்துறையில் உதவி கமிஷனர் ஆக பணி புரிகிறார்.சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது முத்துவேல் பாண்டியனின் மகனை அந்த கும்பல் கடத்தி செல்கிறது,நேர்மையாக வளர்த்ததால் தான் தன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்து விட்டது என்று எண்ணி முத்துவேல் பாண்டியன் அந்த கும்பலை தேடி பழி வாங்குகிறார்.இதனை தொடர்ந்து முத்துவேல் பாண்டியன் தன் மகனை உயிருடன் மீட்டாரா? இல்லையா? இறுதியில் என்ன ஆனது என்பதே ஜெயிலர் படத்தின் கதை ஆகும்.