அதிகரிக்கும் தொற்று பாதிப்பு .. 1வராம் தொடர் விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!
நாடுமுழுவதும் கடந்த சில வாரங்களாக இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதையடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளை உஷார் படுத்தி வருகின்றது.
தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல படையெடுக்க துவங்கும் இந்த இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல், கோடை காலத்தில் இன்னும் தன்னுடைய வீரியத்தை அதிகரிக்கும் என்பதால், தமிழக அரசின் கவனம் தற்போது பள்ளி மாணவர்கள் மீது திரும்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது அரசு பொது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது இன்புளூயன்சா வைரஸானது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால், தமிழகத்தில் உள்ள அணைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த திட்டமிட பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த கொரானா வைரஸ் பரவிய காலத்தில் மாணவர்களுக்கு கல்வி பயில்வதில் பாதிப்பு ஏற்பட்டது போல் தற்போது நடைபெற்றுவிட கூடாது என தமிழக அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சலானது, கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால், ஏப்ரல் இறுதி வரை 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை நடப்பதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகள், ஏப்ரல் 24- ம் தேதிக்கு முன்பாக நடத்தி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.