இந்த வாரம் முழுக்க கேரட் தான்! நடிகை சமந்த வெளியிட்ட சஸ்பென்ஸ் புகைப்படம்
நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரு தட்டு, கோகோபீட், விதைகள் மற்றும் குளிர்ச்சியான அறை மட்டும் கொண்டு சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வதறகான சூப்பர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஷூட்டிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கியுள்ள திரை பிரபலங்கள் பொழுதுபோக்கிற்காக அவர்கள் செய்யும் விசயங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் புத்தகம் படிப்பது,நடனமாடுவது,கார்டனில் எதாவது வேலை செய்வது மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் எதாவது வீடியோ வெளியிடுவது என பெரும்பாலும் அவர்களை பிசியாகவே வைத்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகை சமந்தா இந்த லாக் டௌன் காலத்தில் வீட்டிலிருந்த போது முட்டை கோசை வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.அதில் ஒரு தட்டு, கோகோபீட், விதைகள் மற்றும் குளிர்ச்சியான அறை உள்ளிட்டவைகளை மட்டும் கொண்டு சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வதற்கான டிப்ஸை கொடுத்துள்ளார்.
https://www.instagram.com/p/CETWD72h4SM/?utm_source=ig_embed
மேலும் அவர் தற்போது கேரட் அறுவடை செய்யும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்த வாரம் முழுக்க கேரட் தான்: கேரட் அல்வா,கேரட் ஜூஸ்,கேரட் பச்சிடி,கேரட் சமோசா,கேரட் இட்லி என சமையலுக்கான ஒரு பெரிய லிஸ்டையே வெளியிட்டுள்ளார்.