Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

மஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்?!

மஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்?!

தமிழகத்தில் பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிகிறார்கள் என்பது தெரியுமா?!

ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே அந்த பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் அமைகின்றன. மஞ்சள் தாலிக்கயிறு அணிந்த பெண்கள், குளிக்கும்போது தினமும் தாலியில் பசும்மஞ்சளை அரைத்து பூசுவது வழக்கம். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி. பொதுவாக பெண்களின் உடல், ஆண்களின் உடலைவிட நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். அதானாலேயே பெண்கள் முகம், கைகள், கால்கள், அக்குள், உள்ளுறுப்புகளுக்கு மஞ்சள் தேய்த்து குளிப்பது வழக்கம்.

முன்பெல்லாம் மணமானப்பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாரானாள். அந்த நேரத்தில் அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாய் இருக்கின்றது. கிருமிநாசினியான தாலிக்கயிற்றிலிருக்கும் பசும்மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள் கயிற்றில்தான் தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும்.

அதுபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும். இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக? வேப்பிலையும் ஒரு சிறந்த கிருமிநாசினி. காற்று, தண்ணின்னு எல்லாமே நஞ்சாய் மாறிப்போன சூழலில் வேப்பிலையும் தாயையும், சேயையும் காப்பாற்றுகிறது.

அதனால், எல்லாவற்றிலும், தற்பெருமை, அலங்காரம், பேஷன்னு இருக்காம அர்த்தமறிந்து செயல்பட்டு நலமோடு வாழ்வோம்..!

Leave a Comment