ரேஷன் கடைகளில் புதிய அறிமுகம்! முதல்முறையாக காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!
இனி ரேஷன் கடைகளில் இந்த புதிய வகை வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது, அதாவது இனி ரேஷன் கடைகளில் நீங்கள் வாங்கும் பொருட்களை கியு ஆர் கோடு அல்லது யுபிஐ வசதிகள் மூலமும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தமிழத்தில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது, இந்த கியு ஆர் கோடு செய்யும் முறையை காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு சங்கப் பதிவாளர் சண்முகசுந்தரம் இன்று தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது குறிபிடத்தக்கது.
இந்த கியு ஆர் கோடு அல்லது யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளும் வசதியை பொதுமக்கள் ஸ்மார்ட் போன் மூலமாக பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.
மேலும் இத்திட்டம் முதற்கட்டமாக காஞ்சிபுரத்திலுள்ள 602 நியாய விலை கடைகள், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 7 நகர கூட்டுறவு சங்கம், 10 கூட்டுறவு சங்க மருந்தகங்களில் கியு ஆர் கோடு அல்லது யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.