நடிகர் வடிவேலு குடும்பத்தில் அடுத்த சோகம்!!! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!!
நடிகர் வடிவேலு அவர்களின் சகோதரர் ஜெகதீஸ்வரன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆகஸ்ட்28) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு அவர்கள். இவருடைய வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் நடிகர் வடிவேலு நடிப்பில் சந்திரமுகி2 தியைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
நடிகர் வடிவேலு அவர்களுடைய தம்பி ஜெகதீஸ்வரன் அவர்கள் மலைக்கோவில் தீபம், காதல் அழிவதில்லை போன்ற திரைப்படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். நடிகர் வடிவேலு அவர்களின் சகோதரர் ஜெகதீஸ்வரன் அவர்கள் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் கல்லீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த ஜெகதீஸ்வரன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகதீஸ்வரன் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் என்று மருத்துவமனை தெரிவித்தது.
ஜெகதீஸ்வரன் அவர்களுடைய உடல் அஞ்சலிக்காக மதுரையில் ஐராவதநல்லூரில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. ஜெகதீஸ்வரன் அவர்களுடைய இறுதிச் சடங்கில் நடிகர் வடிவேலு அவர்களும் பங்கேற்கவுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி அவர்கள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இன்று(ஆகஸ்ட்28) நடிகர் வடிவேலு அவர்களுடைய சகோதரர் உயிரிழந்தார். ஒரு வருடத்திற்குள் தாய் மற்றும் சகோதரரின் இறப்பு நடிகர் வடிவேலு அவர்களையும் குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.