அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் ஓபிஎஸ்! ரவீந்திரநாத்திடம் உதவி
சென்னை :
அதிமுக பொதுக்குழு தேர்தலின் வழக்குகளில் உயர்நீதி மன்ற தீர்ப்புகளினால் அடுத்தடுத்து தோல்விகளை ஓபிஎஸ் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக மகன் ரவீந்தரநாத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியை சந்தித்தார்.
ஏற்கனவே இரட்டை இலை சின்ன வழக்கில் தோல்வியை சந்தித்திருக்கிறார். மேலும் அதிமுக பொதுக்குழுவில் இருந்து ஒபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த ஓபிஎஸ் மனமுடைந்து போனார்.
இதிலிருந்து மீண்டு அதிமுக வை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முயற்ச்சித்து கொண்டிருக்கிறார். ஜூலை 11 ல் அதிமுக பொதுக்குழு ஏற்படுத்திய தீர்மானத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதிமுக பொதுக்குழுவை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஒபிஎஸ் க்கு இருக்கும் ஒரே வழி இதுதான்.
ஆனால் இதற்கும் மத்திய அரசின் துணை வேண்டும். இதனால் ஓபிஎஸ் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் பாஜக அமைச்சர் அமித்ஷா வையும் சந்தித்து பேசுவதற்கு அனுமதி பெற்று தருமாறு ரவீந்திரநாத்திடம் கூறியுள்ளார்.
பின்னர் அவர்கள் கர்நாடக தேர்தல் குறித்தும் ராகுல் காந்தி வழக்கு குறித்தும் செயல்படுவதனால் நேரமில்லை என ரவீந்திரநாத் அவர்கள் ஓபிஎஸ் இடம் கூறியுள்ளார். இது சம்மந்தமாக ரவீந்திரநாத்தும் பாஜக நிர்வாகிகளை வைத்து முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என தகவல்வந்துள்ளது.