Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

இந்த ராசிக்கு சுப செய்திகள் வந்து சேரும்! இன்றைய ராசி பலன்கள்: 08/10/2020

இந்த ராசிக்கு சுப செய்திகள் வந்து சேரும்! இன்றைய ராசி பலன்கள்: 08/10/2020

நாள்: சார்வரி வருடம், புரட்டாசி 22 ஆம் நாள், வியாழன் கிழமை (08/10/2020)

திதி: சஷ்டி பிற்பகல் 1:00 வரை, பின்பு சப்தமி

நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 8:06 வரை, பின்பு திருவாதிரை

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

யோகம்: மரணயோகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

நல்ல நேரம்:
காலை: 10:45 – 11:45
மாலை: 12:15 – 01:15

தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 01:30 – 03:00 PM
குளிகை: 09:00 – 10:30 AM
எமகண்டம்: 06:00 – 07:30 AM

வழிபாடு: சிவபெருமானை வழிபட நன்மை உண்டாகும்

ராசி பலன்கள்:

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்கள் வாரிசுகளால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் திறமைகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். கவனமுடன் பொருட்களை கையாள வேண்டும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் யோசித்து முடிவெடுக்க வேண்டும். பணியிடங்களில் பொறுமையாக நடந்து கொள்ளவும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்கள் நண்பர்களின் மூலம் கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவால் பல வரவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்கள் மனதில் இருக்கும் அனைத்து துன்பங்களும் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் நல்ல சூழல் ஏற்படும். உடன்பிறப்புகளுடன் ஏற்படும் வாக்குவாதங்களில் கவனமாக இருக்கவும். நீண்ட நாள் நண்பர்களை காண நேரிடும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களே! இன்று உங்கள் பணியில் உங்களின் செல்வாக்கு உயரும். தொழிலில் உள்ள நுணுக்கத்தை கற்றுக் கொள்வீர்கள். பூஜை, புனஸ்காரங்கள் போன்ற புண்ணிய காரியங்களில் கலந்து கொள்வது நல்லது. கலைத் தொழிலில் உள்ளவர்களுக்கு இன்று சாதகமான நாள்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்கள் உடன்பிறப்புகள் மூலம் நல்ல பலன்கள் உண்டாகும். தொழிலில் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளை முடிக்க இன்று ஏற்ற நாள். பணியிடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல ஏற்ற நாள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்கள் உறவுகளுடன் ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செய்ய நினைத்த காரியங்களில் காலதாமதம் ஏற்படும். போக்குவரத்து தொடர்பான தொழிலில் லாபம் கிடைக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் நல்ல சூழல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உகந்த நாள். வேலை சம்பந்தமான விஷயங்களில் நல்ல பலன் கிடைக்கும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்கள் நண்பர்களின் மூலம் நல்லது நடக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். முடிவு எடுப்பதில் சற்று நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு எதிர்பாராத விதத்தில் லாபம் கிடைக்கும். வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்சனைகளை முடிக்க உகந்த நாள். தொழில் சம்பந்தமான செயல்களில் முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களே! இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளின் மூலம் நற்பெயர்கள் கிடைக்கும். வாரிசுகளின் மூலம் லாபகரமான செய்திகள் வந்து சேரும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களுடன் அலைச்சல் உண்டாகும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்கள் வாரிசுகளின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். தொழிலில் மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களே! இன்று உங்கள் உறவுகளிடம் அனுசரணையாக பழக வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கும். வாகன பயணங்கள் மேற்கொள்வீர்கள். செய்து முடிக்கவிருந்த செயல்களில் காலதாமதம் நீங்கி நல்லது நடக்கும்.

Leave a Comment