சர்ச்சைக்கு உள்ளாகிய ரோகினி தியேட்டர்! டிக்கெட் இருந்தும் அனுமதி மறுப்பு
சென்னை : கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ரோகிணி தியேட்டரில் இன்று சிம்புவின் பத்துதல படம் வெளியானது. அப்போது படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களிடம் டிக்கெட் இருந்தும் அனுமதி அளிக்கப்படவில்லை இதனால் பெறும் சர்ச்சை நிலவியது.
இன்று தமிழகம் முழுவதும் சிம்பு ,கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம் பத்துதல வெளியாகிஉள்ளது. இதனைதொடர்ந்து சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ரோகிணி தியேட்டரில் திரையிடப்பட்ட நிலையில் சிம்பு படத்தை காண்பதற்கு நரிக்குறவர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் டிக்கெட் இருந்தும் அனுமதி மறுத்த தியேட்டர் ஊழியர் உடனே அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் பலர் டிக்கெட் இருந்தும் ஏன் அனுமதி தரமறுக்கின்றீர் என கேள்வி எழுப்பினர். பின்னர் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே சாதிய அடிப்படை பார்க்கின்றார்கள் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
படம் முடிந்த பின்னர் ரோகிணி தியேட்டர் சார்பாக தகவல் வெளியிடப்பட்டது . இந்த படம் யூ ஏ படமாக இருந்தாலும் 12 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்க இயலாது . அதன் அடிப்படையில் தான் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் சர்ச்சைகளின் காரணமாக அவர்களுக்கு அனுமதி தரப்பட்டது என விளக்கம் அளித்துள்ளனர்.
அதன்பின் அனுமதி மறுக்கப்பட்டவர்கள் கூறுகையில் அனுமதி தராதது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே விஜய் படமான வாரிசுக்கு வந்த போது டிக்கெட்டுகளை கிழித்து திட்டி அனுப்பினர் என்று வருத்தத்தோடு தெரிவித்தனர். ஆனால் ரோகிணி தியேட்டர் தரப்பில் வந்த தகவல் ஏற்க
முடியாதது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சர்ச்சை குறித்து கோயம்பேடு காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் ரோகிணி தியேட்டர் நிர்வாகத்திடம் விசாரனை நடத்தி வருகிறார்.