ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தெற்கு ரயில்வே இன்று(செப்டம்பர்7) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு வைகை அதிவிரைவு இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் தாம்பரம், செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் வந்து அங்கிருந்து விருதாச்சலம், அரியலூர் ஆகிய ஊர்கள் வழியாக திருச்சி வந்து சேரும். பின்னர் திருச்சியில் இருந்து திண்டுக்கல் வந்து சோழவந்தான் வழியாக மதுரை இரயில் நிலையத்தை வந்து சேர்கின்றது.
தினசரி சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் இயக்கத் தொடங்கியதில் இருந்து திருச்சி மாவட்டத்தின் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் மக்கள் “வைகை எக்ஸ்பிரஸ் இரயிலை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல வேண்டும்” என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு மூலமாக நிறைவேறியுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்டம் வரை இயக்கப்படும் வைகை அதிவிரைவு இரயில் இனி செப்டம்பர் 16ம் தேதி முதல் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
அதே போல மலைக்கோட்டை விரைவு இரயில் கல்லக்குடி பழங்காநாத்தம் இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து மன்னார்குடி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் இரயில் கொராடாச்சேரி இரயில் நிலையத்தில் நின்று செல்லும். அது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை இரயில் நிலையத்தில் இருந்து மைசூரு வரை இயக்கப்படும் இரயில் புகழூர் இரயில் நிலையத்தில் நின்று செல்லும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.