ஒன்றிய அரசை எதிர்த்து ஸ்டாலின் கடிதம்! தஹிநஹிபோடா ஹேஷ் டேக் டிரெண்ட்
சென்னை : தமிழ்நாடுகளில் உள்ள தென்மாவட்டங்களின் கூட்டுறவு அமைப்பு களில் உள்ள ஆவின் பால் நிலையங்களில் இடம்பெறும் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என குறிப்பிட வேண்டும் என்று ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. இது மீண்டும் ஹிந்தியை திணிப்பது போன்று உள்ளது. குழந்தையை கில்லி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் நினைக்கிறீர்கள் எங்கள் தாய்மொழியைக் காக்கும் நாங்கள் கூறுவதை கேளுங்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
ஒன்றிய அரசு கூறியதாவது, ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் முதன்மை மொழியாக தஹி எனவும் அடைப்புக் குறிக்குள் தமிழ் என்றும் போடுமாறு அறிவுறுத்தியது. இதனை எதிர்க்கும் விதமாக ஸ்டாலின் #tahinahipoda என்ற ஹேஷ் டேக் ஐ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து ஒன்றிய அரசு FSSAI , அறிவிப்பை வாபஸ் வாங்கிகொண்டது…