சமூக வலைதளமான டிக்டாக்கில் மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவர் தான் ரவுடி பேபி சூர்யா. இவர் ரவுடி பேபி சூர்யா என்ற பெயரில் டிக் டாக்கில் மிகவும் கவர்ச்சிகரமாக உடை அணிந்து தொடர்பு வீடியோக்களை பதிவேற்றி மிகவும் பிரபலமான நபராக வலம் வருகிறார். இதனையடுத்து இவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமும் உருவாகியுள்ளது.
ரவுடி பேபி சூர்யா சமீபத்தில் சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறார். இதற்குப் பின்னர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அங்கேயே கொஞ்ச காலம் தங்கிவிட்டு சமீபத்தில் அவர் இந்தியா திரும்பியுள்ளார். அப்போது அவர் கோவை விமான நிலையத்தை வந்தடைந்திருக்கிறார். பின்னர் அவருக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஹோட்டலில் அறை ஒன்று வழங்கப்பட்டு தனிமைப்படுத்தியுள்ளனர். இதற்கு பிறகு அவர் திருப்பூரில் இருக்கும் அவருடைய வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.
இவ்வாறு ரவுடி பேபி சூர்யா வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பியதால் கொரோனா அச்சத்தில் மூழ்கியிருந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து தகவலறிந்து வந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் ரவுடி பேபி சூர்யாவை கொரோனா பரிசோதனைக்காக மீண்டும் அழைத்துள்ளனர்.
ஆனால் சுகாதார துறையினர் அவரை அழைத்த பொழுது அவர் அவர்களுடன் செல்ல மறுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார், அப்போது, இங்க பாருங்க சிங்கப்பூர்ல நான் ஏசியிலேயே இருந்து வந்து இருக்கேன்.. தமிழ்நாட்டுல அடிக்கிற வெயில்ல எனக்கு உங்ககிட்ட இருந்து கொரோனா வந்து விடுமோ என்று பயமாய் இருக்கு. அதனால அரசு ஆஸ்பத்திரியில் எனக்குன்னு தனியா ஒரு ரூம் வேணும். இல்லனா என்னால ஃப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது. மேலும் என்னோட ரசிகர்கள் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. நீங்க ஒருவேளை எனக்கு தனி ரூம் தரலைன்னா நான் உங்கள் கிட்டே கண்டிப்பா பிரச்சனை செய்வேன் என்று திமிராக பேசியுள்ளார்.
அவ செய்த நீண்ட நேர அடாவடிக்கு பிறகு ரவுடிபேபி சூர்யாவை அதிகாரிகள் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் சென்று அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.இவ்வாறு ரவுடி பேபி சூர்யாவை ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் பரிசோதனை மையத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக அதிகாரிகள் அழைத்து சென்ற நேரத்தில் ரவுடி பேபி சூர்யாவை பின் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் சென்றுள்ளார். பின்னர் அவர் இவர் குறித்த இந்த செய்தியை தான் பணியாற்றிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கிறார்.
இதனைப் பார்த்த ரவுடி பேபி சூர்யா, தன்னைப்பற்றி தவறான கருத்துக்களை திரித்து அந்த செய்தியாளர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதாக கூறி கடுமையான வார்த்தைகளால் திட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இவ்வாறு கடுமையான சொற்களை பயன்படுத்தி அவரை பற்றி தவறாக செய்தி வெளியிட்ட அந்த செய்தியாளரை விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா மீது போலீசார் 539/20, 294(b), 500, 506(1) ipc. ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இன்னிலையில் ரவுடி பேபி சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் ரவுடி பேபி சூர்யா சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரவுடி பேபி சிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக டிக்டாக்கில் பதிவு செய்த வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது
ரவுடி பேபி சூர்யா வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில், பெத்தவனும் சரியில்ல.. வந்தவனும் சரியில்ல.. வாச்சவனும் சரியில்ல.. வாழ்க்கையை கொடுக்கப் போறவனும் நிரந்தரம் இல்லை… என்னுடைய வேதனையை பார்த்தீங்களா .. சூர்யா எந்த அளவுக்கு அழகோ அதே அளவுக்கு மனசுக்குள்ள வலியும் வேதனையும் நிறைஞ்சு இருக்கு. என்ன மிரட்டாதிங்கடா.. நான் ஒரு அப்பிராணி.. நீங்க மிரட்டர அளவுக்கு ஒண்ணுமே இல்ல. முடிஞ்சா மிரட்டுவதற்கு பலனா என்ன கூட்டிட்டு போயி உன் ஆசையை தீர்த்துக்கோ.. என்று கண்ணீர் விட்டு கதறி அழுது இருக்கிறார். ரவுடி பேபி சூர்யா இவ்வாறு பேசியிருக்கும் அந்த டிக்டாக் வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.