நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 01 ஆம் நாள், சனிக்கிழமை (17/10/2020)
விரதம்: நவராத்திரி ஆரம்பம்
திதி: பிரதமை இரவு 11:40 வரை பின்பு துவிதியை
நட்சத்திரம்: சித்திரை பிற்பகல் 02:14 வரை பின்பு சுவாதி
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
யோகம்: மரணயோகம் பிற்பகல் 02:14 வரை பின்பு அமிர்தயோகம்
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
நல்ல நேரம்:
காலை: 07:45 – 08:45
மாலை: 04:45 – 05:45
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 09:00 – 10:30 AM
குளிகை: 06:00 – 07:38 AM
எமகண்டம்: 01:30 – 03:00 PM
வழிபாடு: ராஜேஸ்வரியை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
ராசி பலன்கள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். கணவன்-மனைவி இடையே உறவு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புது விதமான சிந்தனைகள் தோன்றும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் அலைச்சலும், பொறுப்புகளும் அதிகரிக்கும். மாற்றங்கள் உண்டாகும். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! போட்டிகளில் வெற்றி பெற்று பாராட்டுகள் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாரிசுகளின் உடல்நிலையில் கவனம் வேண்டும். சூழ்நிலைகள் சாதகமாக அமையும். மனதில் கற்பனைகள் தோன்றும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே! உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தந்தையின் ஆலோசனைகள் பெறுவது நல்லது. மனதில் தெளிவு தோன்றும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்காலம் பற்றிய கவனம் வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. முயற்சிகளில் நிதானம் வேண்டும். ஆலய வழிபாடு மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். நிலுவையில் இருந்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! உறவினர்களிடம் மனக்கசப்புகள் ஏற்படலாம். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் நல்ல சூழல் நிலவும். எதிர்பாராத செய்திகள் வந்து சேரும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பணியிடங்களில் சாதகமான சூழல் நிலவும். பயணங்களில் கவனம் வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களே! கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை தோன்றும். பணிகளில் தனவரவு மேம்படும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! பெற்றோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தடைகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே! உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளில் தடைகள் அதிகரிக்கும். பணியிடங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.