நாள்: சார்வரி வருடம், ஐப்பசி 02 ஆம் நாள், ஞாயிறு கிழமை (18/10/2020)
விரதம்: சந்திர தரிசனம்
திதி: துவிதியை இரவு 09:17 வரை பின்பு திருதியை
நட்சத்திரம்: சுவாதி இரவு 12:37 வரை பின்பு விசாகம்
சந்திராஷ்டமம்: ரேவதி, அஸ்வினி
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 12:37 வரை பின்பு மரணயோகம்
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
நல்ல நேரம்:
காலை: 07:45 – 08:45
மாலை: 03:15 – 04:15
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு: 04:30 – 06:00 PM
குளிகை: 03:00 – 04:30 PM
எமகண்டம்: 12:00 – 01:30 PM
வழிபாடு: பார்வதியை வழிபட மேன்மை உண்டாகும்
ராசி பலன்கள்:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களே! புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். திருமணம் தொடர்பான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களே! போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். தொழிலில் லாபம் பெருகும். உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனக்கவலைகள் நீங்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களே! உறவினர்களுக்கு இடையே மகிழ்ச்சியான சூழல் நிலவும். வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். புதிய முயற்சிகளால் லாபம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களே! உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை தோன்றும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே! மாணவர்கள் கல்வியில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். பேச்சில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே! வியாபாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். பணியிடங்களில் சுப செய்திகள் வந்து சேரும். பணவரவு இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களே! எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழிலில் உள்ள போட்டி, பொறாமைகள் குறையும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களே! வாரிசுகளின் மூலம் லாபம் உண்டாகும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தின் நுணுக்கங்களை கற்பீர்கள். கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு உகந்த நாள். நண்பர்களுடன் நேரம் செலவழிப்பீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களே! பெரியவர்களின் ஆசி கிடைக்கும். தொழிலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனை சம்பந்தமான செயல்களில் எதிர்பார்த்தது நடக்கும். மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். பணியிடங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களே! இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நாள். எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிநாட்டு வேலை முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களே! நண்பர்களின் மூலம் தொழிலில் லாபம் கிடைக்கும். பணியிடங்களில் சாதகமான சூழல் நிலவும். எதிர்பாராத உதவிகளின் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களே! அரசு தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பிறருக்கு உதவும் போது எச்சரிக்கை வேண்டும். ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது கவனம் வேண்டும். செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு சிறந்த நாள்.