Rakul Preet Singh: தாராள மனசுடன் அப்படியே திறந்து காட்டும் நடிகை ரகுல் பரீத் சிங்
தென்னிந்திய திரைப்பட நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கில்லி என்கிற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இது செல்வராகவனின் இயக்கத்தில் தமிழில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட மொழிபெயர்ப்பு படமாகும்.
இவர் இவ்வாறு கன்னட திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னாடி நடிகையாக நடித்து வருகிறார்.
அடுத்ததாக கன்னட திரைப்படத்திற்கு பின்னர் 2012 ஆம் ஆண்டு தமிழில் அருண் விஜய் நடித்து வெளிவந்த தடையற தாக்க திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படமாகும்.
இதற்கு அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.
நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த ரகுல் பிரீத் சிங், தற்போது கமலின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழில் மூன்று படங்களில் நடித்திருந்த போதிலும் போதுமான வரவேற்பு கிடைக்காத காரணத்தால் ஹிந்தி தெலுங்கு என பிற மொழிகளுக்கு தாவிய ரகுல் பிரீத் சிங். அங்கு முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார்.
தெலுங்கில் ப்ரூஸ்லீ, ஸ்பைடர் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ள ரகுள் பிரீத் சிங்.மகேஷ்பாபு நாயகனாக நடித்த ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் ரகுல் ப்ரீத் சிங்
அதோடு, ஹிந்தி, தெலுங்கிலும் நடித்து வரும் அவர், ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள மர்ஜாவான் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் இதைத் தொடர்ந்து மீண்டும் தேவ் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டார் ரகுல் ப்ரீத் சிங்.