இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும்(நவம்பர்8), நாளையும்(நவம்பர்9) கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தின் கடல் சார்ந்த பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று(நவம்பர்8) கனமழை பெய்வதால் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் இன்று(நவம்பர்8) ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி. இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சேலம், தர்மபுரி. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
அது மட்டுமில்லாமல் நாளையும்(நவம்பர்9) கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றது.