ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!!
கனடா நாட்டின் டொரொண்டோவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறார்.தனது 7 வயதில் செஸ் விளையாட தொடங்கிய குகேஷ் 9 வயதில் ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார்.
அதன் பின்னர் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு இளம் வீரர்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் தங்க பதக்கங்களை வென்று 12 வயதில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
செஸ் விளையாட்டின் குரு என்று அழைக்கப்படும் மேக்னஸ் கால்சனை 2022 ஆம் ஆண்டு வீழ்த்தி அசத்தினார்.இந்நிலையில் கனடா நாட்டின் டொரொண்டோவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனைகளை குவித்து இருக்கிறார்.
இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின்னர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார்.
கிராண்ட் மாஸ்டர் குகேஷ் படைத்த 3 சாதனைகள்:-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் இந்த பட்டத்தை வென்ற இந்தியாவின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதுமட்டும் இன்றி கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் பங்கு பெற்ற இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமைக்கு உரித்தானவர்.
மேலும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் செஸ் வீரர் என்ற மூன்று சாதனைகளை புரிந்து இருக்கிறார்.கிராண்ட் மாஸ்டர் குகேஷின் இந்த வெற்றி ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கிடைத்த வெற்றி என்று செஸ் ஜாம்பவான்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.