Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற சின்னத்திரை நடிகை 4 ஆவது கணவருடன் கைது

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனையடுத்து மக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடாமல் தடுப்பதற்காக கடந்த ஐம்பது நாட்கள் வரை மதுக்கடைகள் திறக்காமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கேரளா மாநிலத்தை தவிர்த்து மற்ற சில மாநிலங்கள் படிப்படியாக மதுக்கடைகளைத் திறந்தனர். 


இந்நிலையில் கேரளாவில் மது கிடைக்காமல் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளச் சாராயத்தின் விநியோகம் திடீரென்று அதிகரித்துள்ளது. இதனையடுத்து இதையெல்லாம் தடுக்கும் விதமாக கேரளா காவல் துறையினர் தனிப்படை அமைத்து, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையாள டிவி நடிகை மஞ்சு சினி என்பவர் தன்னுடைய வீட்டிலேயே தனது 4 ஆவது கணவருடன் சாராயம் காய்ச்சி விற்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஆர்யன்கோடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சின்னத்திரை நடிகை மஞ்சு சினி வீட்டில் சோதனையிட்டபோது, ரூ.10,000 மதிப்பிலான 75 லிட்டர் சாராயமும், அதை உருவாக்க பயன்படும் உபகரனங்களும் பிடிப்பட்டுள்ளது.
 

42 வயதாகும் மஞ்சு சினியின் கணவர் விஷாக் என்பவர் மீது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொலை வழக்கு இருப்பதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. லாக்டவுன் காரணமாக சினிமாத்துறை முடங்கியிருப்பதால், பணத்திற்காக சாராயம் விற்கும் இந்த தொழிலைச் செய்ததாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மஞ்சு சினி தெரிவித்துள்ளார். 

Leave a Comment