மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியானது தகவல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியானது தகவல்

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார் என்று தகவல்கள் வெளியானது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவருக்கு தற்போது வயது 74.கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த சிகிச்சையின் போது அவருக்கு எக்மோ கருவி, மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கபட்டது.

s p balasubrahmanyam passed away today
s p balasubrahmanyam passed away today

இந்நிலையில் சமீபத்தில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை சார்பாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் அவருக்கு நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை இருப்பதால் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முதல் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உறுதிபடுத்தப்பட் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment