இன்று இரவு வானில் நிகழப் போகும் அதிசயம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!
வானில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.வழக்கமாக ஒரு மாதத்தில் ஒரு முறை தான் முழு நிலவு தென்படும்.அதனை பவுர்ணமி என்று அழைக்கிறோம்.ஒருவேளை ஒரு மாதத்தில் இருமுறை முழு நிலவு தென்பட்டால் இரண்டாவதாக தென்படும் நிலவு நீல நிலவு அதாவது ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.இந்த அதிசய நிகழ்வு கடந்த 2007,2018 மற்றும் 2020ல் வானில் தென்பட்டது.இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்த ப்ளூ மூன் என்ற அரிய நிகழ்வு வானில் தென்பட இருக்கிறது.
இந்த அதிசய நிகழ்வை ப்ளூ மூன் என்று அழைப்பதால் நிலவு நீல நிறத்தில் தென்படுமா? என்று அனைவரின் மத்தியிலும் கேள்வி எழலாம்.உண்மை என்னவென்றால் நிலவின் நிறத்தில் எந்தவித மாறுபடும் தென்படாது.வழக்கத்தை விட ஒரே மாதத்தில் இரண்டாவது முறை ஒரு முழு நிலவு தென்படுவது தான் இதன் சிறப்பு.வானில் நிகழவுள்ள இந்த அரிய அழகிய காட்சியை உலகில் எந்த இடத்தில் இருந்தும் பார்க்க முடியும்.இன்று வானில் தென்படும் நிலவின் அளவு வழக்கத்தைவிட சற்று பெரியதாகவும்,அதிக பொலிவுடனும் காணப்படும்.இனி இந்த அதிசய நிகழ்வு எப்பொழுது நடைபெறும் என்று கணிக்க முடியாது.இதனால் இரவு நிகழ இருக்கும் அதிசயத்தை மறக்காமல் காணுங்கள்.இன்று இரவு வானத்தை ரசிப்பவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஒரு சிறந்த மாதம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.