மன அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!!! அதிர்ச்சியில் உறைந்த நடிகர் விஜய் ஆண்டனி!!!
நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நான் என்ற திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், எமன், சைத்தான், பிச்சைக்காரன் 2 என்று தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறியுள்ளார்.
பிரபல நடிகராக மாறியுள்ள நடிகர் விஜய் ஆண்டனி அவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் மகள் லாரா உள்ளார். விஜய் ஆண்டனி மகள் லாரா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்து வந்துள்ளார். மகள் லாரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் லாரா மன அழுத்தம் காரணமாக இன்று(செப்டம்பர்19) அதிகாலை 3 மணியளவில் வீட்டில் அவருடைய அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா மூலமாக தூக்கிட்டு உள்ளார்.
தூக்கிட்ட அவரை மீட்டு கார் மூலமாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மக்கள் நிலையில் அங்கு லாரா அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மன அழுத்தத்தில் இருந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது.