நடிகர் விஜயகாந்த் அவர்கள் காலமானார்! சோகத்தில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது அடுத்து சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் சற்று முன் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தேமுதிக கட்சியின் நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் நேற்று முன்தினம்(டிசம்பர்26) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது வழக்கமான சிகிச்சைக்காகத்தான் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று(டிசம்பர்27) நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று(டிசம்பர்28) நடிகர் விஜயகாந்த் அவர்களின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து அவரை கண்காணித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று(டிசம்பர்28) நடிகர் விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் காலமான செய்தியை கேட்ட அவருடயை ரசிகர்களும் தொண்டர்களும் மிகுந்த சோகத்தில் மூழ்கினர். மேலும் விஜயகாந்த் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல சென்னை சாலி கிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்த் அவர்களின் வீட்டில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை துணை ஆணையர் தீபக் அவர்களின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை மற்றும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.