ஒரே நாளில் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை! அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!
இன்று(டிசம்பர்22) ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தற்பொழுது உள்ள மக்கள் அனைவரும் முதலீடு செய்வதற்கு சிறப்பான பொருளாக தங்கத்தை பார்க்கின்றனர். அப்படி பார்க்கும் பொழுது தங்கத்தின் விலையை கேட்கும் பொழுது முதலீடு செய்வதற்கு நாம் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகின்றது.
என்னதான் தங்கம் முதலீடு செய்வதற்கான சிறப்பான பொருள் இருந்தாலும் அதன் விலையை கேட்கும் பொழுது நகை பிரியர்களுக்கு அதன் மீது உள்ள ஆசை போய்விடும். அந்த வகையில் ஒரு நாள் தங்கத்தின் விலை குறைந்தால் அதற்கு இரு மடங்காக இரண்டு நாட்கள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. அந்த வகையில் இன்று(டிசம்பர்22) ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளது. இது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியையும் தலையில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 46880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி 81000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.