Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

வாயில் சரக்கு பாட்டிலுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!

வாயில் சரக்கு பாட்டிலுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!

தசரா திரைப்படத்தின் புரமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் வாயில் சரக்கு பாட்டிலுடன் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

உகாதி திருநாளை முன்னிட்டு தசரா படத்தில் இருந்து தூம் தாம் என்கிற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது.

இதற்காக மும்பையில் புரமோஷன் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த புரமோ நிகழ்ச்சியில் நடிகர் நானியும், கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டனர்.

தசரா திரைப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கியுள்ளர். இப்படத்தில் நடிகர் நானி கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

எஸ்.எல்.வி சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தசரா திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது அப்படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட புரமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி இருவருமே கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இன்று உகாதி திருநாளை முன்னிட்டு தசரா படத்தின் தூம் தாம் என்கிற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்வதற்காக மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் நானியும், கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராணாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நானி தசரா பட டிரைலரில் நானி சரக்கு பாட்டிலை வாயில் வைத்து ஒரே கல்பாக அடிக்கும் காட்சியை போல நேரில் அதை செய்து காட்டியுள்ளார்.

அப்போது அங்கு பாட்டிலுடன் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், நானிக்கு போட்டியாக அவரது ஸ்டைலிலேயே அந்த பாட்டிலை வாயில் வைத்து அதில் உள்ளதை குடித்தார்.

இதை பார்த்து அங்கிருந்த அவரது ரசிகர்கள் ஷாக் ஆகினர். பின்னர் விசாரிக்கையில் தான் அந்த பாட்டிலில் மது இல்லை வெறும் குளிர் பானம் மட்டுமே இருந்தது என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அங்கு வந்திருந்தவர்களுக்கு அந்த குளிர்பானத்தை வழங்கி நடிகை கீர்த்தி சுரேஷ் உற்சாகப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து இந்த விழாவில் தூம் தாம் பாடலுக்கு நானியும் கீர்த்தி சுரேஷும் நடனமும் ஆடினர். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Leave a Comment