40 வயதிலும் இப்படியா..? இணையத்தில் வைரலாகும் நடிகை மாளவிகாவின் வீடியோ

தமிழில் உன்னை தேடி என்ற திரைப்படத்தின் மூலம் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா. இவரது உண்மையான பெயர் ஸ்வேதா ஆகும். உன்னை தேடி படத்தில் மாளவிகா என்ற கதாபத்திரத்தில் நடித்தார். படத்தின் ஹீரோ அஜித் ” மாளவிகா… மா..ள..விகா.. மனம் பறித்தாய் மா…ள..விகா..” என்று டூயட் பாடி ஸ்வேதா என்ற பெயரை மாளவிகா என்று மாற்றிவிட்டார்.
அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது. சித்திரம் பேசுதடி படத்தில் இவர் நடனமாடிய வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் மஞ்சள் நிற சேலையில் ஆட்டம் போட்டார். அந்த பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பயனற்ற பிசியாக இருந்த மாளவிகா 2009 ஆம் ஆண்டு வெளியான ஆறுபடை படத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு திருமண வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். அதன்பிறகு அவர் படங்களில் தலைகாட்டுவதில்லை.
குடும்பம் குழந்தைகள் தான் தநுடைய௧ உலகம் என வாழ்ந்து வரும் இவர்tதன்னுடைய உடல் நலத்தை பேணுவதையும் தவறுவது இல்லை. இதற்காக, யோகா மற்றும் எளிமையான உடற் பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
தற்போது, எளிமையான உடற்பயிற்சி ஒன்றை செய்து அதனை உங்களால் செய்ய முடியுமா..? என்று ரசிகர்களுக்கு சவால் விட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்.40 வயதிலும் இப்படி மிரட்டுகிரீர்களே மேடம் என பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ உங்களுக்காக