ஆடையை தொடர்ந்து அமலாபால் நடிக்கவிருக்கும் அடுத்த ஆபாசக்கதை படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
கடந்த ஜூலை மாதம் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான படம் தான் ஆடை. இப்படம் வெளிவந்த பிறகு பல சர்ச்சைகளும் அதைத்தொடர்ந்து நடிப்பிற்காக நிறைய பாராட்டுகளையும் வாங்கிய தந்தது. இந்த படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்தது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஹிந்தியில் பெண்களுக்கு காமத்தின் மீது ஏற்படும் உணர்ச்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் ’தி லஸ்ட் ஸ்டோரி’. இந்த படத்தில் ஹிந்தி நடிகையான கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே மற்றும் மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர்.
நான்கு வித்யாசமான கதைக்களம் கொண்ட இத்திரைப்படத்தை ரண் ஜோகர், திபகர் பேனர்ஜி,அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர் ஆகிய நான்கு இயக்குனர் இணைந்து இயக்கியுள்ளனர்.
நடிகை அமலாபாலின் போல்ட்டான நடிப்பின் மூலமாக தெலுங்கில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை தற்போது சமந்தா நடித்து வெளிவந்த ஓ பேபி படத்தை இயக்கிய பி.வி. நந்தி ரெட்டி இயக்கவுள்ளார்.
ஏற்கனவே ஹிந்தியில் வெளியான இந்த லஸ்ட் ஸ்டோரியில் பெற்றோர்கள் கண்முன்னே சுயஇன்பம் செய்யும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியில் தற்போது தெலுங்கு ரீமேக்கில் உருவாகும் இந்த படத்தில் அமலாபால் நடிப்பாரா? என்று ஒரு கேள்வி ரசிகர்களால் எழுந்து வருகிறது.
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது போல இந்த படத்திலும் அமலாபால் அதிர்ச்சி வைத்தியம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.